இலங்கை
அரிசியை இறக்குமதி செய்யப்போகும் சீனா!
இலங்கைக்கு ஒரு மில்லியன் மெற்றிக்தொன் அரிசியை இலவசமாக வழங்க சீன அரசாங்கம் முன்வந்துள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்றுமுன்தினம் இரவு (18) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் சீனாவுக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட இறப்பர் -அரிசி வர்த்தக உடன்படிக்கை 2022 ஆம் ஆண்டில் 70 வருடங்களை பூர்த்தி செய்வதால் ஒரு மில்லியன் மெற்றித்தொன் அரிசியை இலவசமாக வழங்குமாறு வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன அண்மையில் சீன தூதுவரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
அக்கோரிக்கையை நிதியமைச்சின் வெளிவிவகாரத் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்குமாறும் சீனத் தூதுவர் கோரியிருந்தார். அதற்கமைவாக வெளிவிவகார அமைச்சு கடிதம் மூலம் சீனத் தூதரகத்திடம் கோரிக்கையை சமர்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login