செய்திகள்
துறைமுக அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்த இறக்குமதியாளர்கள் சங்கம்
அபாராத தொகை அறவிடும் நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்துமாறு இறக்குமதியாளர்கள் சங்கம் துறைமுக அதிகார சபைக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
துறைமுகத்தில் தேங்கியிருக்கும் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை 7 நாட்களுக்குள் விடுவிக்காவிட்டால் தண்டப்பணம் அறவிடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது வளமை. இந்த நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாடு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய 1,700 கொள்கலன்கள் துறைமுகத்தில் தேங்கியுள்ளன.
இறக்குமதி செய்யப்பட குறித்த கொள்கலன்கள் 7 நாட்களுக்குள் அகற்றப்படவில்லையெனில் துறைமுக அதிகார சபையால் தாமதக் கட்டணத்துக்கு மேலதிகமாக அபராத தொகையும் விதிக்கப்படுவது வழமை.
அரசுடன் பல கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றாலும் இதுவரை எவ்வித தேர்வும் கிடைக்கப்பெறவில்லை எனவும் இறக்குமதியாளர்கள் சங்கத்தின் பேச்சாளர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
#srilankanews
You must be logged in to post a comment Login