செய்திகள்
மீரிகம _ குருநாகல் அதிவேக நெடுஞ்சாலை: பொதுமக்களின் பாவனைக்காக இன்று!
மீரிகம முதல் குருநாகல் வரையிலான மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் இரண்டாம் கட்டமாக இன்று பொதுமக்களின் பாவனைக்காக திறந்து வைக்கப்படவுள்ளது.
இதன் நிர்மாணப் பணிகளுக்காக 137 பில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது, இதன் நீளம் 40.91 கிலோமீற்றர்களாகும்.
மீரிகம, நாகலகமுவ, தம்பொக்க, குருநாகல் மற்றும் யக்கபிட்டிய ஆகிய இடங்களில் கட்டணம் செலுத்தும் கருமபீடங்களுடன், ஐந்து பரிமாற்ற நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்கு வழிப்பாதையான இந்த வீதியின் மீரிகமவிலிருந்து குருநாகல் வரையிலான பகுதிஇ தற்போது இலங்கையின் மிக அழகிய அதிவேக நெடுஞ்சாலைப் பிரிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதாக பெருந்தெருக்கள் அமைச்சுதெரிவித்துள்ளது.
#srilankanews
You must be logged in to post a comment Login