Connect with us

செய்திகள்

வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு தோல்வி! – பறிபோகும் நிலையில் தவிசாளர் பதவி

Published

on

valvettithurai e1637149617186

2022ஆம் ஆண்டுக்கான வல்வெட்டித்துறை நகர சபையின் பாதீடு இன்று புதன்கிழமை புதிய தவிசாளர் செல்வேந்திராவால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பில் ஒரு வாக்கினால் பாதீடு தோல்வியடைந்தது.

பாதீடு தோல்வியடைந்துள்ள நிலையில், இன்றிலிருந்து 14 நாட்களில் திருத்தங்களுடன் மீண்டும் பாதீடு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன்போதும் பாதீடு தோல்வியடைந்தால், தவிசாளர் தனது பதவியை இழக்க நேரிடும்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தவிசாளரான கோணலிங்கம் கருணாந்தராசா கொரோனாத் தொற்றுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்திருந்தார்.

இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 22ஆம் திகதி புதிய தவிசாளராக சுயேச்சை குழு உறுப்பினரான எஸ்.செல்வேந்திரா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

புதிய தவிசாளர் பதவியேற்று இரண்டு மாதங்களுக்குள், அவரால் முன்வைக்கப்பட்ட முதலாவது பாதீடு தோற்கடிக்கப்பட்டுள்ளது.

14 நாட்களில் அவரால் மீண்டும் சமர்ப்பிக்கப்படும் பாதீடு தோற்கடிக்கப்படுமாயின், அவர் தனது தவிசாளர் பதவியை இழப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

 

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

Advertisement

ஜோதிடம்

tamilnaadi 5 tamilnaadi 5
ஜோதிடம்2 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 25 டிசம்பர் 2024 – Daily Horoscope- Happy Christmas

இன்றைய ராசிபலன் 25.12.2024, குரோதி வருடம் மார்கழி 10, புதன் கிழமை, சந்திரன் துலாம் ராசியில் சஞ்சரிக்கிறார். மீனம் ராசியில் உள்ள பூரட்டாதி, உத்திரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்24 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் : 24 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 24.12.2024, குரோதி வருடம் மார்கழி 9, செவ்வாய்க் கிழமை, சந்திரன் கன்னி ராசியில் சஞ்சரிக்கிறார். கும்பம் ராசியில் உள்ள சதயம், பூரட்டாதி சேர்ந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்...

tamilnaadi 4 tamilnaadi 4
ஜோதிடம்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 22 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 22.12.2024, குரோதி வருடம் மார்கழி 7 ஞாயிற்று கிழமை, சந்திரன்...

tamilnaadi 3 tamilnaadi 3
ஜோதிடம்5 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 20 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 20.12.2024, குரோதி வருடம் மார்கழி 5 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்6 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் : 19 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 19 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 19.12.2024, குரோதி வருடம் கார்த்திகை 4, வியாழக் கிழமை, சந்திரன்...

tamilnaadi 2 tamilnaadi 2
ஜோதிடம்1 வாரம் ago

இன்றைய ராசி பலன் : 17 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 17 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 17.12.2024, குரோதி வருடம் மார்கழி 2, செவ்வாய்க் கிழமை, சந்திரன்...

tamilnaadi 1 tamilnaadi 1
ஜோதிடம்2 வாரங்கள் ago

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope

இன்றைய ராசி பலன் : 13 டிசம்பர் 2024 – Daily Horoscope இன்றைய ராசிபலன் 13.12. 2024, குரோதி வருடம் கார்த்திகை 28 வெள்ளிக் கிழமை,...