செய்திகள்
வாள்கள் மற்றும் கைக்கோடரிகளுடன் மூவர் கைது!
மட்டக்களப்பு- சந்திவெளி பொலிஸ் பிரிவில் வாள்கள் மற்றும் கைக் கோடரி ஆகியவற்றுடன் மூன்று பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்திவெளி -சித்தாண்டி விநாயகர் கிராமத்தில் வாள்களுடன் குழுவொன்று சுற்றித்திரிவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்தே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் பயனாக ஆறு வாள்கள் மற்றும் ஒரு கைக் கோடரி என்பவற்றுடன் மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், அவர்களை ஏறாவூர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
#SrilankaNews
You must be logged in to post a comment Login