செய்திகள்
அரச சார்பற்ற நிதியம் ஒன்று அவசியம்!
ஓய்வு நிலை அரச அதிபர் வேதநாயகன் தலைமையில் அரச சார்பற்ற நிதியம் ஒன்று உருவாக்கப்படவேண்டுமென யாழ் பல்கலைக்கழக கல்வியற் துறை விரிவுரையாளர் இ சர்வேஸ்வரா தெரிவித்துள்ளார்
அளவையூர் தத்துவஞானி கைலாசபதி அரங்கில் இடம்பெற்ற ஓய்வுநிலை அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனின் சேவை நயப்பு விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் அரச அதிபராக கடமையாற்றி தற்போது ஓய்வு பெற்றுள்ள அளவெட்டி மண்ணின் மைந்தன் நா.வேதநாயகன் ஒரு நேர்மையான அரச அதிகாரி.
அந்த நேர்மையான அதிகாரியின் ஓய்வின் பின்னர் அவரது எதிர்காலம் தொடர்பில் பலராலும் பேசப்பட்டு வருகின்றது அவர் அரசியலுக்குள் நுழையலாம் எனவும் பேசப்படுகிறது
நேர்மையான அரச அதிகாரி அரசியல் பாதையில் சென்றால் அவரது நேர்மையை பாதிக்கும் எனவே அரசியல் பக்கம் செல்வதை தவிர்ப்பது நல்லது .மேலும்
அளவையூர் மக்கள் சார்பில் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.
அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களை புலம்பெயர் மக்களின் உதவியுடன் செய்ய முடியும் உதாரணமாக தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக முன்னர் பல திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன
அதேபோல நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் ஒரு அரச சார்பற்ற நிதியம் ஒன்றினை உருவாக்குவதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து பல மில்லியன் ரூபா நிதி உதவிகளை பெற்று அரசினால் செய்ய முடியாத பல திட்டங்களை எமது பிரதேசங்களில் முன்னெடுக்க முடியும்.
குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற அமைப்பின் ஊடாக புலம்பெயர் நாட்டில் இருந்து கிடைத்த நிதி மூலம் பல்வேறுபட்ட மக்கள் நலன் சார் அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
#SrilankaNews
You must be logged in to post a comment Login