செய்திகள்
நல்லைக்குமரன் 29 வது இதழ் வெளியீடும் – யாழ் விருது வழங்கும் நிகழ்வும்
யாழ்ப்பாண மாநகராட்சி மன்ற சைவசமய விவகாரகுழுவினரால் வருடந்தோறும் வெளியிடப்பட்டு வரும் நல்லைக்குமரன் மலரின் 29 வது இதழ் வெளியீடும்,சமய சமூகப் பணியாற்றும் ஒருவருக்கு வருடம்தோறும் வழங்கப்படும் யாழ் விருது வழங்கும் நிகழ்வும் இன்று இடம்பெற்றது.
இன்று காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் நாவலர் மண்டபத்தில் யாழ் மாநகர சபை ஆணையாளர் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர முதல்வரும்,சைவ சமய விவகார குழுவின் தலைவருமான வி.மணிவண்ணன் கலந்து கொண்டதோடு சிறப்பு விருந்தினராக வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கலந்துகொண்டார்.
ஆன்மீகத் தலைவர்களின் ஆசியுரையோடு ஆரம்பமாகிய குறித்த நிகழ்வில் நல்லைக்குமரன் நூல் வெளியிடப்பட்டதுடன் இவ் வருடத்துக்கான யாழ் விருது சுன்னாகம் வாழ்வகத்தின் தலைவர் திரு.ஆ.ரவீந்திரனுக்கு வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login