செய்திகள்
ஆலயத்திற்குள் காட்டு யானைகள் அட்டகாசம்!!!
மட்டக்களப்பில் ஆலயங்களை காட்டு யானைகள் சேதப்படுத்துகிறது.
மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பன்குடாவெளி சிவ முத்துமாரியம்மன் மற்றும் ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயங்களிற்குள் இன்று புகுந்த காட்டு யானைகள் ஆலயங்களிற்கு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன.
காட்டு யானைகளால் ஆலயக் கட்டடங்கள் பகுதியளவில் சேதமாகியுள்ளது. அத்துடன் ஆலய வளாகத்திற்குள் இருந்த பயன்தரும் மரங்களும் முற்றாக சேதமடைந்துள்ளன.
மேலும் பூசைப் பொருட்களுக்கு சேதத்தை விளைவித்துள்ளது.
சமீப நாட்களாகவே காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login