இலங்கை
நாளை முதல் மாகாணங்களிடையே ரயில், பஸ் சேவைகள் ஆரம்பம்
நாளை முதலாம் திகதி தொடக்கம் மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதன் பின் பயணிகள் போக்குவரத்து சேவைகளை மீள ஆரம்பிக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, இலங்கை போக்குவரத்து சபை மற்றும் இலங்கை ரயில்வே திணைக்களம் ஆகியவை திட்டமிட்டுள்ளன.
அதன்படி, பயணிகளின் தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிரண்டா தெரிவித்தார்.
சுகாதார விதிமுறைகளின் படி சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றிருத்தல் வேண்டும், முகக்கவசங்கள் அணிவது கட்டாயம், இருக்கை எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்லுதல் போன்றவற்றை கடைப்பிடித்தல் வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை நவம்பர் முதலாம் திகதி தொடக்கம் 152 ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே பொது முகாமையாளர் ஜே.ஐ.டி.ஜெயசுந்தர தெரிவித்தார்.
பயணிகள் வசதிக்காகவும், சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ரயில்வே திணைக்களம் அதிக ரயில்களை ஒதுக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார்.
அதேவேளை, பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்குவதற்காக தமது பஸ் சேவைகள் தற்போது இயங்கி வருகின்றன எனவும் இலங்கை போக்குவரத்து சபையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
#SrilankaNews
You must be logged in to post a comment Login