செய்திகள்
தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல் – பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவு
எல்லை தாண்டிய தமிழக மீனவர்கள் 23 பேரையும் இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
கடந்த 14ஆம் திகதி தமிழகத்தில் இருந்து இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடிக்க வந்த இரண்டு படகுகளையும் அதிலிருந்த 23 மீனவர்களையும் கைது செய்த கடற்படையினர் காரைநகர் கடற்படை முகாமில் தங்க வைத்திருந்தனர்.
இது தொடர்பான வழக்கு இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரித்த நீதவான் தமிழக மீனவர்களை இரண்டு வாரங்களுக்கு விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அந்தவகையில் நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை 23 தமிழக மீனவர்களும் காரைநகர் கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்படுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#SriLankaNews
You must be logged in to post a comment Login