மன்னிப்புக் கோருகிறது பேஸ்புக் நிறுவனம்!
உலகளாவிய ரீதியில் வட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்கள் செயலிழந்துள்ளமையால் பயனர்களின் பயன்பாட்டில் சிக்கல் நிலையில் இருப்பதை நாங்கள் அறிவோம்.
முடிந்தவரை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்புவதற்கு நாம் பணியாற்றி வருகின்றோம்.
மேலும் இந்தச் சிரமத்துக்கு மன்னிப்பு கோருகிறோம் என்று பேஸ்புக் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோல் வட்ஸ் அப் தளத்திலும் பயனர்கள் சிக்கல் நிலையை எதிர்கொள்கிறார்கள். இயல்புக்குக் கொண்டு வர பணியாற்றுகிறோம். கூடிய விரைவில் சரிசெய்யப்படும் என டுவிட்டர் பக்கத்தில் வட்ஸ் அப் பதிவிட்டுள்ளது.