செய்திகள்
வானில் இருந்து வந்த மர்மப்பொருள்! – இலங்கையில் பதிவான சம்பவம்
இலங்கையின் சில பகுதிகளில் வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹிஅத்தகண்டிய, கிராதுருகோட்டை மற்றும் அம்பாறை பிரதேசங்களில் இவ்வாறு வானிலிருந்து மர்ம பொருள் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிலந்தி கூடுகள் போன்ற பொருள் ஒன்று நேற்று காலை வானில் பறந்தது வந்ததுடன், அவை தரையில் விழுந்ததாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கருத்து வெளியிடுகையில்,
“தொழில் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது நூல் போன்ற ஒன்று வானில் இருந்து விழுந்தது. அவை பிரதேசம் முழுவதும் வெள்ளையாக படர்ந்து காணப்பட்டது.
எவ்வாறாயினும், சூரிய ஒளி பட்டவுடன் அவை மறைந்துவிடுகின்றது. நேரத்தில் விமானம் ஒன்று அந்த பகுதிகளில் பறந்ததனை அவதானித்தோம். அதில் புகை போன்று வெளியேறியது எனினும் சற்று நேரத்தில் விமானம் மறைந்து விட்டது.
இதனால் சந்தேகம் ஏற்பட்டு பொலிஸார் மற்றும் விமானப்படையினருக்கு தகவல் வழங்க நடவடிக்கை மேற்கொண்டோம் என தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login