இலங்கை
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பில் தீர்மானமில்லை
அத்தியாவசிய பொருட்களான பால்மா , எரிவாயு, கோதுமை மா மற்றும் போன்றவற்றின் விலைகள் அதிகரிப்பது தொடர்பில் நேற்றைய அமைச்சரவை சந்திப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் பல அத்தியாவசிய பொருட்களின் விலைகளுக்கான உத்தேச திருத்தங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
எனினும் இது தொடர்பில் எந்தத் தீர்மானமும் முன்வைக்கப்படவில்லை.
இதேவேளை கொழும்பு துறைமுகத்தில் தடைப்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களை வெளியிடுவதற்கு மத்திய வங்கியிலிருந்து தேவையான நிதி வழங்க அமைச்சரவை முடிவு செய்தள்ளது என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரிசிக்கு விதிக்கப்பட்ட விலைக்கட்டப்பாட்டை நீக்கி அரிசி பற்றாக்குறையை தடுக்க ஒருலட்சம் மெற்றித் தொன் அரிசியை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை நேற்றைய தினம் முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
You must be logged in to post a comment Login