இலங்கை
நாட்டை திறப்பது சந்தேகமே! – ரணில்
தற்போது நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊடரங்குச் சட்டத்தை எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி நீக்குவதற்கான சாத்தியக் கூறுகள் குறைவாகவே உள்ளன.
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
வர்த்தக சம்மேளன கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் சந்தைக்கான டீசலை கொள்வனவு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் காரணமாக ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்குச் சட்டம் நீக்காது ஒக்ரோபர் நடுப்பகுதி வரை முடக்கநிலை தொடர வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு நாணயங்களின் கையிருப்பு குறைவடைந்து வருகின்றமையே அதிக கரிசனைக்குரிய பிரச்சினை என அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பிராந்திய நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ள நிலையில் நாட்டின் நிலவரம் எதிர்மாறானதாக காணப்டுகிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login