இலங்கை
தடுப்பூசி நிலையங்கள் தொடர்ந்து இயங்காது!!!! – அமைச்சு அறிவுறுத்து
எதிர்வரும் காலங்களில் தடுப்பூசி ஏற்றப்படும் மையங்களை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என சுகாதார சேவைகள் பணியாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அதன்படி 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த வாரத்துக்குள் தடுப்பூசியை பெற வேண்டும். அதனால் அருகில் உள்ள தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் சென்று தடுப்பூசிகளை பெறுமாறு நட்டு மக்களுக்கு கோரிக்கைவிடுத்துள்ளார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த வயதுடையவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்கு தொடர்ந்து தடுப்பூசி நிலையங்களை இயங்கவைக்க முடியாது. அதன் காரணமாக மட்டுப்படுத்தப்பட்டு காலக்கெடு வழங்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது.
தற்போது நாட்டில் தடுப்பூசி ஏற்றத் தொடங்கி ஒரு வருடம் ஆகியுள்ள நிலையில் வீடுகளுக்கு அருகில் சென்று தடுப்பூசி போடுவதற்கு பதிலாக ஒரு சில முக்கிய மையங்களில் மட்டுமே தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படவிருக்கிறது.
எனவே கொரோனாத் தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதால் தற்போது செலுத்தப்படும் தடுப்பூசிகளை விரைவில் பெறுமாறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login