இலங்கை
பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பம்!
நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
மேலும், 30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு சகல பல்கலைக்கழங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தடுப்பூசி செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அனைத்து பல்கலைக்கழக சுகாதாரத்துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத் தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே பல்கலைக்கழகங்கள் விரைவில் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login