இலங்கை
நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு அரசே முழுப்பொறுப்பு!
நாடு தற்போது பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. இதனால் மக்கள் பல இன்னல்களையும் கஷ்டங்களையும் எதிர்கொள்கின்றனர். இதற்கு இந்த அரசாங்கமே முழுப் பொறுப்பாகும்.
மோசமான நிலைக்கு நாடு சென்றுவிட்டது.அரசின் தவறுகளால் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி நாட்டு மக்கள் இறந்த வருகின்றனர்.
இவ்வாறு எதிர்க்கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி அலவத்துவல தெரிவித்துள்ளார்.
எமது நாடு தெற்காசியாவில் மிக மோசமான இடத்துக்கு சென்று விட்டது. பங்களாதேஷ், இந்தியா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகள் கொவிட் தொற்றிருந்து முன்னேறிவிட்டன. ஆனால் எமது நாட்டில் நாளுக்கு நாள் உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றன.
இன்று நம் நாட்டில் டொலர்கள் இல்லை. அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் அது தொடர்பாக பல்வேறு அறிக்கைகளை வெளியிடுகின்றனர்.
எமது நாட்டில் சட்டம் ஒழுங்கு அமல்படுத்தப்படுவதில் இலங்கை தீவிரமாக முரண்படுவதாக மனித உரிமை ஆணையர் குற்றம் சாட்டியுள்ளார். தற்போதைய அரசாங்கம் ஒரே நாடு, ஒரே சட்டம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தது. இன்று என்ன நடந்ததுள்ளது? ஒரே சட்டம் அரசாங்க உறுப்பினர்களுக்கு அமுல்படுத்தப்படுவதில்லை.
ஜிஎஸ்பி பிளஸ் சலுகை இல்லாத போது, நம் நாட்டில் ஏராளமான மக்கள் வேலை மற்றும் வருமானத்தை இழந்துள்ளனர்.
இன்று நம்மிடம் இருப்பது அதிகாரங்கள் தான். தன்னிச்சையான செயற்பாட்டில் தான் நம் நாட்டின் சட்டம் சரியாக அமுல்படுத்த அனுமதிக்கப்படவில்லை.
நாட்டில் பொருளாதாரம் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. பிழையான சோடிக்கப்பட்ட அறிக்கைகளை வெளியிடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.
நாட்டு மக்களின் மனித உரிமைகளைப் பாதுகாக்க விரிவாக பணியாற்றுவது முக்கியம்.தடைகள் ஏற்படுவதற்கு முன் அவற்றைத் தடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.
விவசாய சமூகத்துக்கு வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த அரசாங்கம் முதலில் என்ன செய்துள்ளது?இன்று விவசாயிகளுக்கு தேவையான அளவு உரங்களை வழங்க அவர்களால் முடியவில்லை.
முழு தனியாரிடமும் நெல் வாங்குவதை அரசாங்கம் நிறுத்தாதுள்ளது .நெல்லுக்கு ஒரு கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்படாமலுள்ளது என்பது தெளிவாகிறது. – என மேலும் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login