இலங்கை
அரசியல் கைதி 12 ஆண்டுகளின் பின் விடுதலை!
இறுதிப் போரின் போது இராணுவத்திடம் சரணடைந்து புனர்வாழ்வு பெற்ற பின் மூன்று மாதங்களில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதி ஒருவர் 12 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
முல்லைத்தீவு உடையார்கட்டைச் சேர்ந்த நடராசா குகநாதன் என்பவரே கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நேற்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
12 வருடங்களாக வழக்கு தாக்கல் செய்யப்படாமல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவரது மனைவி இவரின் விடுதலைக்காக பல தரப்பினருக்கும் 100 க்கும் மேற்பட்ட கடிதங்களை அனுப்பிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது .
You must be logged in to post a comment Login