இலங்கை
எகிறும் டெல்டா – 199 மாதிரிகளில் 113 பேருக்கு தொற்று உறுதி!
வடக்கு மாகாணத்தில் 199 மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 113 பேருக்கு டெல்டா தொற்று திரிபு உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த சொந்தமாய் அறிக்கையின் முடிவுகளின் படி 113 பேர் டெல்டா திரிபாலும் 10 பேர் அல்பா திரிபாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நுண்உயிரியல் துறையால் எடுக்கப்பட்ட மாதிரிகளின் பகுப்பாய்விலேயே இது தொற்று நிலைமை கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டில் பரவலாக அனைத்து மாகாணங்களிலும் டெல்டா திரிபு வைரஸ் 84 முதல் 100 சதவீதம் வரை பரவியுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அனைத்து மாகாணங்களிலும் 881 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், 592 பேருக்கு டெல்டா திரிபு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வடக்கிலும் ஆட்டத்தை ஆரம்பித்தது டெல்டா – வவுனியாவில் 50 பேருக்கு தொற்று!
You must be logged in to post a comment Login