இலங்கை
இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை
இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை
கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையுடன் பெற்றுக் கொள்ள முடியும்.
ஆயுள்வேத வைத்தியசாலைகள் இது தொற்றுக்கு இலவச சிகிச்சை வழங்குகின்றன என கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி இ.சிறிதர் தெரிவித்துள்ளார்.
அதன்படி அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை, திருகோணமலை- கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலை, கிண்ணியா – நடுத்தீவு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைகளில் ஆகியவற்றில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
இங்கு நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, குருதி அமுக்க பரிசோதனை, சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட பல வைத்திய பரிசோதனைகளுடன் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளும் நாளாந்தம் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இதற்கு ஆயுள்வேத வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் சமூக நல வைத்தியர்களை தொடர்பு கொண்டு, கொவிட் – 19 தொடர்பான வைத்திய ஆலோசனைகளுடன் அதற்கான சிகிச்சை முறைகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்/
You must be logged in to post a comment Login