இலங்கை
மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!
மீனவரின் கையை மீளப்பொருத்திய யாழ். போதனா வைத்திய நிபுணர்கள்!!
மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, படகின் வெளியிணைப்பு இயந்திரத்துக்குள் சிக்கி துண்டாடப்பட்ட மீனவரின் கை, யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை வைத்திய நிபுணர்களால் மீளப் பொருத்தப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பருத்தித்துறைக் கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தவறிக் கடலில் வீழ்ந்துள்ளார்.
அவரது வலது கை மற்றும் வலது கால் ஆகியவை வெளியிணைப்பு இயந்திரக் காற்றாடிக்குள் சிக்கி சிதைந்தன.
அவர் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், வைத்தியர்கள் கடும் போராட்டத்தின் பின்னர் அவரது கையை மீள இணைத்துள்ளனர். இந்த சத்திரசிகிச்சை சுமார் 5 மணி நேரம் நடந்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பிளாஸ்டிக் சத்திர சிகிச்சை நிபுணர் வைத்தியர் இளஞ்செழிய பல்லவன் உட்பட வைத்திய நிபுணர்கள் இந்தச் சத்திர சிகிச்சையை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login