செய்திகள்
இலங்கையில் வஹாபிசம் துடைத்தெறிப்பட வேண்டும்! – ஞானசாரர்
நியூசிலாந்தில் இலங்கையரால் நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்துள்ள பொதுபலசேன அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர், இலங்கையில் வாஹாபிஸம், சலாபிசம் என்பனவை முற்றாகத் துடைத்தெறியப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
நியூசிலாந்து தாக்குதல் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து விடுத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே ஞானசார தேரர் மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இஸ்லாமிய நலன்புரி அமைப்புகள் மற்றும் முஸ்லிம் தொண்டு நிறுவனங்கள் தடை செய்யப்பட வேண்டும். இஸ்லாமிய அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய வெளியீடுகள் மற்றும் ஒலி, ஒளி சாதனங்கள் என்பவையும் தடைசெய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஜ் ஹிஸ்புல்லாவையும் ஏனையவர்களையும் விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகள் வலியுறுத்துக்கின்றபோதும், விசாரணைகள் முடிவடைந்து உண்மை கண்டறியப்படும் வரை அவர்களை விடுதலை செய்யக்கூடாது என்றும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login