செய்திகள்
இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க யாழ்.போதனா பணிப்பாளர் இடையூறு!!
![இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க யாழ்.போதனா பணிப்பாளர் இடையூறு!! 1 WhatsApp Image 2021 09 06 at 20.44.05](https://b3217245.smushcdn.com/3217245/zeepsoza/2021/09/WhatsApp-Image-2021-09-06-at-20.44.05.jpeg?lossy=2&strip=1&webp=1)
இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க யாழ்.போதனா பணிப்பாளர் இடையூறு!!
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிப்பதற்கு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் தடையாக இருக்கிறார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இன்று கொழும்பில் ஊடக சந்திப்பை நடத்திய அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினரும், ஊடகக் குழு உறுப்பினருமான மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்தார்.
இரண்டாவது பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை நிபுணரை நியமிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நடவடிக்கை எடுத்தபோதும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளரும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் அதற்குத் தடையாக இருக்கின்றனர் என்று அவர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login