இலங்கை
கொவிட் தொற்றால் 32 கர்ப்பிணிகள் பலி
இலங்கையில் கொரோனாத் தொற்று காரணமாக இதுவரை 32 கர்ப்பிணிகள் உயிரிழந்துள்ளனர் என குடும்ப சுகாதார பணியகம் அறிவித்துள்ளது.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது சுகாதார அமைச்சின் குடும்ப நல பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்திரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டில் இதுவரையில் 4 ஆயிரத்து 200 கர்ப்பிணிகள் தொற்றுக்கு இலக்காகியுள்ளதுடன் தற்போது 900 பேர் வரையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் 75 வீதமான கர்ப்பிணிகள் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் எனவும் கொவிட் தடுப்பூசியை பெறாத கர்ப்பிணிகளுக்கு கொரோனாத் தொற்று பரவும் சாத்தியக்கூறு அதிகம் உள்ளதால் உடனடியாக தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறும் அறிவுறுத்தியுள்ளார்.
You must be logged in to post a comment Login