இலங்கை
பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி


பெரும்பான்மையினர் நாடு முடங்குவதை விரும்பவில்லை – கூறுகிறார் இராணுவத் தளபதி
நாட்டின் பெரும்பான்மையான மக்கள் நாட்டை முடக்க வேண்டாம் என்றே கூறுகின்றனர். இதனால் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்த்தே நாட்டை முடக்காது இருக்கின்றோம் – இவ்வாறு கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
நாட்டின் கொரோனா நிலவரம் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த இராணுவத் தளபதி மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் கொரோனாத் தொற்றாளர்களும் டெல்டா தொற்றாளர்களும் அதிகரித்துள்ளமையை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். சாவு எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரிக்கின்றது. ஆனால், நாட்டை முடக்க வேண்டாம்; நாங்கள் பொறுப்பாக நடந்துகொள்கின்றோம் என்று மக்கள் கூறுவதனாலேயே நாட்டை முடக்காது வைத்திருக்கின்றோம்.
எனினும் நாட்டை முடக்குமாறு சிறிய குழுவினரே கூறி வருகின்றனர். ஆனால், மக்கள் தொடர்ந்தும் பொறுப்புணர்வுடன் நடந்துகொண்டால் நிலைமையைக் கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முடியும். சுகாதார ஒழுங்கு விதிகளை பின்பற்றி கொரோனாப் பரவலைக் கட்டுப்படுத்த மக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். – என்றார்.
You must be logged in to post a comment Login