image 839728b484
இலங்கைசெய்திகள்

விடைத்தாள் திருத்தம் – மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

Share

இந்த வேளையில் விடைத்தாள் மதிப்பீட்டில் இருந்து விலகாமல் செயற்பாடுகள் முடியும் வரை கோரிக்கைகளை வென்றெடுக்கும் நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் டி.எம்.எச்.எஸ்.கே. பன்னெஹெக்க மற்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர ஆகியோருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர்​நீதிபதி ரோஹினி மாரசிங்க இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

மேலும் உரையாற்றிய அவர், பல்கலைக்கழக ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பில் உயர்மட்ட குழுவொன்றை நியமித்து கலந்துரையாடப்பட வேண்டுமென மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இலங்கையில் பரீட்சைகளின் தரம் மற்றும் தரம் என்பவற்றின் சர்வதேச அங்கீகாரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்தப் பரீட்சைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்களின் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு உரிய தரப்பினர் செயற்பட வேண்டுமென தவிசாளர் நீதிபதி ரோஹினி மாரசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...