tamilni 7 scaled
இலங்கைசெய்திகள்

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்

Share

தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அபராதம்

தேசிய அடையாள அட்டை இல்லாத 40 வயதுக்கு மேற்பட்டர்களுக்கு, அதனைப் பெறுவதற்காக 2,500 ரூபா அபராதமாகச் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தகவலை ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் பிரதீப் சபுதந்திரி கையொப்பமிட்ட கடிதம் மூலம் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார்.

மேலும், முன்னதாக தேசிய அடையாள அட்டை பெறாத குற்றத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் தீர்த்து வைப்பதற்காக இந்த அபராதம் விதிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும், உயர்த்தப்பட்ட அபராதத் தொகையைச் செலுத்த முடியாத குறைந்த வருமானம் பெறும் நபர்களிடமிருந்து மட்டும், முன்னர் அறிவிடப்படும் அபராதத் தொகையான 250 ரூபாவை வசூலிக்க ஆட்திவுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
articles2FTC207I0V0Mwrh6Fetrpk
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: வயல் நிலங்களில் படிந்த மணலை அகற்ற மகாவலி சபை அனுமதி! 

‘டிட்வா’ சூறாவளியுடன் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிலைமையினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வயல்நிலங்களில் குவிந்துள்ள மணல் மற்றும் மணல்...

images 9 1
இலங்கைசெய்திகள்

டிட்வா புயல் நிவாரணம்: இலங்கையின் 200 மில்லியன் டொலர் அவசர நிதிக் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை!

சமீபத்திய ‘டிட்வா’ புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்துள்ள சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர நிதியிடல் வசதியின் கீழ்...

MediaFile 10
இந்தியாசெய்திகள்

படைவீரர் கொடி நாள் இன்று அனுசரிப்பு: முப்படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் பிரதமர் மோடி நிதி அளிப்பு.

இந்தியாவின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7ஆம் திகதி...

MediaFile 9 1100x619 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

நிவாரண நிதி குளறுபடிக்கு அரச அதிகாரிகளே பொறுப்பு: யாழ் மாவட்டச் செயலாளர் எச்சரிக்கை!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படும் 25,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு விநியோகத்தில், தகுதியானவர்கள் புறக்கணிக்கப்பட்டாலோ அல்லது...