ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

Share

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில் சந்தித்துள்ளார்.

மேற்படி சந்திப்பின் போது, பரஸ்பர நலன் சார்ந்த விவகாரங்கள் மற்றும் இந்திய நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய இருதரப்புத் திட்டங்களின் மீள்ஆய்வு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த சந்திப்பைத் தொடர்ந்து, ‘டித்வா’ புயலின் பாதிப்புகளுக்குப் பிறகு வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் மறுசீரமைப்புத் தொகுப்பின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் அமெரிக்க டொலருக்கு நிகரான ‘இந்திய ரூபாய் அடிப்படையிலான கடன் உதவி ஒப்பந்தங்களை இரு தரப்பும் பரிமாறிக்கொண்டன.

இந்த கடன் உதவிகள் புயலுக்குப் பிந்தைய மறுசீரமைப்புப் பணிகள், உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் அவசியமான கொள்முதல் தேவைகளுக்கு உபயோகப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
gunshootpolise 2
இலங்கை

இலக்கு தவறிய துப்பாக்கி பிரயோகம் – ஒருவர் பலி

  நேற்று இரவு 9.40 மணியளவில் கல்கிஸ்ஸ, ஹுளுதாகொட ஒழுங்கையில் அமைந்த மோட்டார் சைக்கிள் திருத்துகம்...

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...