இன்றைய தினம், இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி ஒரு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கையை வந்தடைந்துள்ளார்.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களால் இந்திய வெளியுறவுச் செயலாளருக்கு வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.
குறித்த விஜயத்தின் போது, வெளியுறவுச் செயலாளர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரையும் ஏனைய உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
மேற்படி, விஜயத்தின் மூலம் இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே உள்ள நெருங்கிய இருதரப்பு உறவுகள் மேலும் வலுப்படும் என்றும், தற்போது நடைமுறையிலுள்ள உயர்மட்ட தொடர்புகளின் அடிப்படையில் இருநாடுகளுக்குமிடையிலான முக்கிய ஒத்துழைப்புத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் குறிப்பிடப்படுகின்றது.