இந்தியா
இந்தியாவிலிருந்து வரப்போகும் கோடிக்கணக்கான முட்டைகள்
இந்தியாவிலிருந்து வரப்போகும் கோடிக்கணக்கான முட்டைகள்
இந்தியாவிலிருந்து(india) இரண்டாவது முறையாக இறக்குமதி செய்யப்படும் மூன்று கோடி முட்டைகளின் முதல் தொகுதியை இம்மாதம் நாடு பெறும் என்று அரச வணிக இதர சட்டபூர்வ நிறுவனம் தெரிவித்துள்ளது.
இவ்வருடம் முட்டை இறக்குமதி செய்வது தொடர்பான கொள்முதல் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்தார்.
வற் உள்ளிட்ட அரசாங்க வரிகளை செலுத்தியதன் பின்னர் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் மற்றும் முன்னர் போன்று இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் லங்கா சதொச ஊடாக பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர குறிப்பிட்டார்.
உள்ளூர் சந்தையில் ஒரு முட்டை 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதால் மீண்டும் முட்டை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்த அவர், முட்டையின் மூலம் உள்ளூர் முட்டை வியாபாரிகள் வரம்பற்ற இலாபம் ஈட்டுவதாகத் தெரிவித்தார்.
முன்னதாக முட்டை இறக்குமதி நிறுத்தப்பட்ட பின்னர் முட்டை வியாபாரிகள் அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்து நுகர்வோரை சுரண்டியதாகவும், இதனால் நுகர்வோருக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டதாகவும் தலைவர் ஆசிறி வலிசுந்தர மேலும் தெரிவித்தார்.