இந்தியா
இந்தியாவில் குறைவடையும் கொரோனா
இந்தியாவில் நேற்றையதினம் 15 ஆயிரத்து 906 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்தளவிலேயே பதிவாகியுள்ளது.
உலகளாவிய ரீதியில் கொரோனாத் தொற்றினால் அதிகளவில் பாதிக்கப்பட்ட நாடுகளில் தர வரிசையில் இந்தியா இரண்டாவது இடத்திலிருந்து வருகிறது.
அங்கு சில மாதங்களுக்கு முன்னர், கொரோனாத் தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர் ஒட்சிசன் பற்றாக்குறையினால் வீதிகளில் வீழ்ந்து உயிரிழந்தது மாத்திரமின்றி
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைகளிலும் உயிரிழந்தனர்.
தற்போது அங்கு கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதற்கமைய இந்தியாவில் நேற்றைய தினம் மாத்திரம் 15 ஆயிரத்து 906 பேர் கொரோனாத் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இது நேற்று முன்தினம் பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையை விடக் குறைந்ததாகும்.
அங்கு கொரோனாப் பாதிப்பை உறுதிப்படுத்த ஒரு நாளில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்களுக் பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#india
You must be logged in to post a comment Login