பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர் 2 கிலோ ஹெரோயினுடன் கைது: நவம்பர் 26 வரை விளக்கமறியலில் நீதிமன்று உத்தரவு!

25 690c62aa700e2

பேலியகொட நகரசபை உறுப்பினரின் அதிபர் கணவர், சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

எப்பாவல, கட்டியாவ, யாய 10 பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் அதிபர் ஆவார்.

இவர் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக அநுராதபுரம் வலய குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அண்மையில் தகவல் கிடைத்திருந்தது.

இதனையடுத்து, குறித்த அதிபருக்குச் சொந்தமான எப்பாவல பிரதேசத்தில் அமைந்துள்ள விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டது.

இந்தச் சுற்றிவளைப்பின் போது, சுமார் 2 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருள் விடுதியின் பின்புறத்தில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கைப்பற்றப்பட்ட இந்த ஹெரோயின் போதைப்பொருளின் மதிப்பு சுமார் இரண்டு கோடி ரூபாய் என காவல்துறையினர் மதிப்பிட்டுள்ளனர்.

Exit mobile version