மட்டக்களப்பில் வெள்ளத்தால் அல்லலுறும் யானைகள்: உணவின்றி மனித குடியிருப்புகளை நோக்கிப் படையெடுப்பு!

images 9

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற வானிலையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நீரில் அல்லலுறும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி கறுத்த பாலத்திற்கு அருகில் உள்ள பிரதேசத்தில், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் காடுகள் முழுவதும் வெள்ள நீர் காணப்படுகிறது.

இதன் காரணமாக யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கின்றன. அதேவேளையில், காடுகளில் உணவின்மை காரணமாக யானைகள் மற்றும் ஏனைய வன விலங்குகள் மனிதக் குடியிருப்புகள் நோக்கிப் படையெடுக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

வெள்ளநீர் வடிந்த பின்னரே வனவிலங்குகளின் இயல்பு வாழ்க்கை திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. வனவிலங்குகளிடமிருந்து பொது மக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Exit mobile version