முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைத் தேடி இரட்டைவாய்க்கால் பகுதியில் நேற்று முன்தினம் (நவ4) அகழ்வு நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் சாலை வீதியில் வலைஞர்மடம் சந்திக்கு அருகில் விடுதலைப் புலிகள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாகக் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு (CID) கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, நீதிமன்ற அனுமதியுடன் குறித்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கனரக இயந்திரம் கொண்டு குறித்த பகுதி 15 அடிக்கு மேல் தோண்டப்பட்டது. தீவிரத் தேடலுக்குப் பின்னரும் எதுவும் கிடைக்காத நிலையில் அகழ்வுப்பணியினைக் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைவிட்டுள்ளனர்.

