இந்தியத் தலைநகர் புதுடெல்லியின் வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கோட்டை (Red Fort) அருகே நேற்றிரவு இடம்பெற்ற சிற்றூந்து வெடிப்புச் சம்பவம் தீவிரவாதத் தாக்குதலாக இருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் பஹல்காமில் (Pahalgam) நடந்த தாக்குதலுக்கு எதிரான, இந்திய இராணுவத்தின் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ (Operation Sindhur) நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவத்தில் பலியானோர் குறித்த தகவல்கள் வேறுபடுகின்றன; குறைந்தது 9 பேர் பலியானதாக இந்தியாவின் சில ஊடகங்களும், 13 பேர் இறந்ததாகத் தமிழகத்தை மையப்படுத்திய ஊடகங்களும் குறிப்பிட்டுள்ளன.
டெல்லியில் சிற்றூந்து குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழகம், மஹாராஷ்டிரா, கேரளா, ஒடிசா மற்றும் உத்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டு, அங்குப் பாதுகாப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையிலேயே டெல்லியில் வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அண்மையில், காஷ்மீர் – பரிதாபத்தில் 2,900 கிலோ வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போது சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.