யட்டியந்தோட்டை இறப்பர் தொழிற்சாலையில் கொதிகலன் வெடிப்பு: ஒருவர் பலி, 3 பேர் காயம்!

MediaFile 4

யட்டியந்தோட்டைப் பகுதியில் உள்ள கிருபொருவ தோட்டத்தில் இயங்கி வந்த இறப்பர் தொழிற்சாலை ஒன்றில் கொதிகலன் (Boiler) ஒன்று வெடித்ததில், ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.

இந்த அனர்த்தத்தில், 25 வயதுடைய ஓர் இளைஞர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காயமடைந்த மூன்று பேரும் சிகிச்சைக்காக உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் குறித்து ருவான்வெல்ல காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Exit mobile version