73 பில்லியனுக்கான குறை நிரப்பு பிரேரணை சமர்ப்பிப்பு!!
நாட்டில் கொரோனா ஒழிப்பு மற்றும் மேலதிக செலவுகளுக்காக 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை அரசாங்கம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.
நாடாளுமன்றம் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியுள்ளது.
அரச தரப்பின் பிரதம கொறடாவான அமைச்சர் தலைமை சாட்டையர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, 73.2 பில்லியன் ரூபாவுக்கான குறை நிரப்பு பிரேரணையை சபையில் சமர்ப்பித்தார்.
தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குதல் , கொரோனா சிகிச்சை மையங்களின் செலவுகள், மீனவர்களுக்கு நிவாரணம், தெற்கு நெடுஞ்சாலையை மாத்தறையிலிருந்து அம்பாந்தோட்டை வரை நீடித்தல், சூரியவெவ சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பு மற்றும் அமைச்சரவைக் கட்டடம் புதுப்பித்தல் உள்ளிட்ட செலவுகளுக்கு தேவையான குறை நிரப்பு பிரேரணையே இன்று சபையில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
Leave a comment