1732374016 images 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை: மலைப்பகுதி மக்கள் விழிப்புடன் இருக்க அறிவுறுத்தல்!

Share

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, கண்டி, நுவரெலியா, பதுளை மற்றும் மாத்தளை ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு முதற்கட்ட நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) விடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பின்வரும் பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அதிக அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்:

பதுளை மாவட்டம்: லுணுகலை, மீகஹகிவுல, வெலிமடை, கந்தகெட்டிய, ஹாலி எல, பதுளை, ஊவா பரணகம மற்றும் பஸ்ஸறை.
மாத்தளை மாவட்டம்: வில்கமுவ, உக்குவெல, அம்பன்கங்கை கோரளை, ரத்தோட்டை மற்றும் லக்கல பல்லேகம.
நுவரெலியா மாவட்டம்: நில்தண்டாஹின்ன, வலப்பனை, மதுரட்ட மற்றும் ஹங்குரன்கெத்த.
கண்டி மாவட்டம்: உடுதும்பர.

தொடர்ச்சியாக மழை பெய்யும் பட்சத்தில் நிலத்தில் வெடிப்புகள் ஏற்படுதல், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்வடைதல் அல்லது கட்டிடங்களில் திடீர் வெடிப்புகள் தோன்றுதல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக மலைச் சரிவுகளுக்கு அருகில் வசிப்போர் இரவு நேரங்களில் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

 

 

Share
தொடர்புடையது
1532860700 Two police officers arrested over assaulting two youths B
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பு குருக்கள்மடத்தில் பதற்றம்: இளைஞர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் – இருவர் படுகாயம்!

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி காவல் பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் காவல்துறையினர் மேற்கொண்ட தாக்குதலில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளதோடு,...

22 62a8366eaa932
செய்திகள்இலங்கை

பெண் அரச ஊழியர்களுக்கு Work From Home வசதி? – அமைச்சரவை மட்டத்தில் தீவிர ஆலோசனை!

இலங்கையில் பெண் அரச ஊழியர்கள் வீட்டிலிருந்தே பணியாற்றுவதற்கு அனுமதிக்கும் புதிய முன்மொழிவு குறித்து மகளிர் விவகார...

download 1 1
செய்திகள்விளையாட்டு

LA 2028 ஒலிம்பிக்: வெறும் 28 டொலர்களுக்கு நுழைவுச்சீட்டு – முன்பதிவு இன்று முதல் ஆரம்பம்!

2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான நுழைவுச்சீட்டு முன்பதிவு...