இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் 25 முக்கிய கடத்தல்காரர்கள் அடையாளம்: அவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள்!

23 64e4c01e53a82

இலங்கைக்குப் போதைப்பொருள் கடத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள 25 முக்கிய கடத்தல்காரர்களை அரசாங்கம் அடையாளம் கண்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாகிஸ்தானியர்கள் என்றும் அமைச்சர் ஆனந்த விஜேபால குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறை தலைமையகம் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த 25 கடத்தல்காரர்களில் பலர் பாதாள உலகக் குழுக்களுடன் நேரடித் தொடர்புகளைக் கொண்டுள்ளனர் என்பதற்கான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனையடுத்து, குறித்த கடத்தல்காரர்களின் நடவடிக்கைகள் தொடர்பில் காவல்துறை விசேட கவனம் செலுத்தி வருவதாகவும், அவர்களைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version