இந்தியா
ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு
குடியரசு தினத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்துக்கு தவெக தலைவர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 26-ம் திகதியான குடியரசு தினத்தில் அரசியல் கட்சி தலைவர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்ளிட்டோருக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் தேநீர் அளிப்பது வழக்கமாக நடைபெறும்.
அந்தவகையில், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, காங்கிரஸ், விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் இந்த தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக கூறியுள்ளன.
தற்போது, திமுகவுக்கும், பாஜகவுக்கும் விஜய் எதிராக பேசிய நிலையில் இந்த தேநீர் விருந்தில் கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.