இந்தியா

திராவிடத்தையும் தமிழ் தேசியத்தையும் இணைக்கமுடியாது: மீண்டும் வலியுறுத்தும் சீமான்

Published

on

இந்திய நடிகரும், அரசியல்வாதியுமான விஜய்யின் கருத்தை மறைமுகமாக கண்டித்துள்ள தமிழர் கட்சி நிறுவனர் சீமான், திராவிடமும் தமிழ்த் தேசியமும் ஒரு கட்சியின் இரு கண்களாக இருக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

திராவிடம் விசம் போன்றது என்றும், தமிழ்த் தேசியம் அதன் மாற்று மருந்தாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

விழுப்புரம் – விக்கிரவாண்டியில் நடந்த விஜய்யின் தமிழக வெற்றிக்கழக முதல் மாநில மாநாட்டின் பின்னரே இந்த கருத்து பேசு பொருளாக மாறியுள்ளது.

இந்தநிலையில், விஜய் தனது சித்தாந்தம் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று சீமான் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது திராவிடம் மற்றும் தமிழ் தேசியம் குறித்த விஜய்யின் கருத்துக்கள் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த சீமான், திராவிடம் என்பது மக்களை ஆள்வது என்றும், தமிழ் தேசியம் என்பது தமிழர்கள் உயர்நிலையை அடைய உதவுவது என்றும் கூறியுள்ளார்.

எனவே, இரண்டும் ஒரே மாதிரியாக இருக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். மதுவை தடை செய்யவேண்டும் என்று தமிழ் தேசியம் கூறுகிறது.

எனினும், திராவிடம் மதுபானகங்களை திறக்கிறது. திராவிடம் சாதிப் பிரிவினையை ஊக்குவிக்கிறது. எனினும் தமிழ் தேசியம் சாதிப்பிரிவினையை நிராகரிக்கிறது என்று சீமான் குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் திராவிடம் எவ்வாறு தமிழ் தேசியத்துடன் உண்மையாக இணைய முடியும்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Exit mobile version