இந்தியா

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிப்பு

Published

on

தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் நாள் மற்றும் நேரம் அறிவிப்பு

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு நடைபெறும் நாள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழக கட்சியை தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அவர் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

அவர் மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்தும், மாணவ மாணவியருக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தும் வருகிறார்.

இந்நிலையில், தனது கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வேலைகளை நடிகர் விஜய் செய்து வருவதாக கூறப்படுகிறது. இதற்காக பிரம்மாண்டமான மாநாட்டை நடத்தவுள்ளார்.

அதற்குரிய வேலைகளையும் கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு ஒக்டோபர் 27 -ம் திகதி விக்கிரவாண்டியில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்ட அறிக்கையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுகப்படுத்திய நாள் முதல், நம் கழகத் தோழர்களின் எண்ணங்களுக்கு ஏற்பவும் தமிழ்நாட்டு மக்களின் பேரன்புடனும் பேராதரவுடனும் நமது அரசியல் வெற்றிக்கான களம் விரிவடைந்துகொண்டே வருகிறது.

கழகக் கொடியேற்று விழாவின்போது, நமது முதல் மாநில மாநாட்டுத் திகதியை அறிவிப்பதாகக் கூறியிருந்தோம்.

நமது மக்களின் பெரும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக அரசியல் களத்தில் புதிய நம்பிக்கையை விதைக்கக்கூடிய நமது கழகத்தின் கொள்கைத் தலைவர்கள், கொள்கைகள் மற்றும் கொள்கை சார்ந்த செயல் திட்டங்களைப் பிரகடனப்படுத்தும் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, வருகின்ற ஒக்டோபர் மாதம் 27 -ம் திகதி, மாலை 4 மணி அளவில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது என்பதைப் பெருமகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

நமது வெற்றிக் கொள்கை மாநாடு, நம்மை வழிநடத்தப் போகும் கொள்கைகளையும் நாம் அடையப் போகும் இலக்குகளையும் முழங்கும் அரசியல் திருவிழாவாகவும் பெருவிழாவாகவும் கொண்டாடப்படவுள்ளது.

Exit mobile version