இந்தியா

உதயநிதிக்கு பிறகு இன்பநிதி என தெரிந்தது தான்.., துணை முதலமைச்சர் பதவி குறித்து சீமான் காட்டம்

Published

on

தமிழகத்தின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்கவுள்ளார் என்று தகவல் பரவி வருவது தொடர்பாக சீமான் கருத்து தெரிவித்துள்ளார்.

தமிழக விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று சில மாதங்களாக தகவல்கள் பரவி வருகிறது. இதனை சில திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்து விட்டு வந்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்த அறிவிப்பின் மூலம் உதயநிதி ஸ்டாலின் தமிழகத்தின் துணை முதலமைச்சராக பதவியேற்பார் என்று தகவல் பரவுகிறது.

உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராவதாக தகவல் பரவுவது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், இன்பநிதி என்று அடுத்தடுத்து திமுகவின் தலைவர்கள் ஆவது தான் சனாதனம்.

பட்டியலின மக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் ஆகியோரின் ஓட்டுகளை கூட்டணி மூலம் வாங்கி கொண்டு வாரிசுகள் வருவது தான் சனாதனம்.

சமூக நீதி, சனாதன ஒழிப்பு பற்றி பேசுகிறார்கள். ஆனால், இதனை விட கொடிய சனாதனம் இல்லை.

உதயநிதி துணை முதலமைச்சராவது, பின்னர் முதலமைச்சராவது எல்லாம் தெரிந்த கதை தான். அடுத்ததாக இன்பநிதியை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.

Exit mobile version