செய்திகள்
அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி
அரச ஊழியர்களுக்கு சஜித் வெளியிட்டுள்ள நற்செய்தி
அரச ஊழியர்களுக்கு 2025 ஜனவரி முதல் சம்பளத்தை 24% ஆக அதிகரித்து அரச ஊழியர்களுக்கு வழங்கப்படுகின்ற 17800 வாழ்க்கைச் செலவு கொடுப்பனவை 25000 வரை அதிகரிப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அனைத்து அரச ஊழியர்களின் குறைந்த பட்ச அடிப்படைச் சம்பளம் 57500 ரூபாவாக அதிகரிக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
வரகாபொல நகரில் நேற்று (23) தேர்தல் பிரசாரத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், “அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றில் பொருத்தமான திருத்தங்களை மேற்கொள்ள விசேடமான ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, இந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு அமைய செயல்படுத்துவோம்“ என தெரிவித்துள்ளார்.
அத்துடன், தற்பொழுது காணப்படுகின்ற வரிக் கொள்கையினால் அரச ஊழியர்கள் உட்பட தொழிலாளர் வர்க்கமே பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அரச ஊழியர்களின் பெரும்பாலானவர்களின் சம்பளத்திற்கு அறவிடப்படுகின்ற வரி 6-36% வரையிலான உழைக்கும் போது செலுத்தும் வரி வீதம் 24% வரை குறைக்கப்படும் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.