செய்திகள்

தரமற்ற மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் தகவல்

Published

on

தரமற்ற மருந்து பொருட்கள் இறக்குமதி தொடர்பில் தகவல்

இலங்கை சுகாதார அமைச்சின் மருத்துவ விநியோகப் பிரிவின் தகவல்படி, 2024 ஆம் ஆண்டில் இதுவரை மொத்தம் 51 மருந்துகள், தரப் பரிசோதனையில் தோல்வியடைந்துள்ளன.

இந்த தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில், சுமார் 27 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, 07 மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, ஏனையவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஸ் போன்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.

இந்தநிலையில் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்பப் பெறப்பட்டுள்ளன அல்லது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 2017 முதல் இறக்குமதி மருந்துகளில் மொத்தம் 600 தரக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன.

2019 ஆம் ஆண்டில் 96 தரக்குறைப்பாடுகள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் 2022 இல் 86 மருந்துகள் தரப் பரிசோதனையில் தோல்வியடைந்தன.

இதற்கிடையில் 2023 இல் மருந்துகளின் தரக்குறைப்பாடுகள், நாட்டில் உயிரிழப்புக்கள் உட்பட்ட சம்பவங்களுக்கு காரணம் என்று கண்டறியப்பட்டிருந்தன.

Exit mobile version