இந்தியா
அரசு மீது தான் கோபம் இருக்கனும்.. காவல்துறை அதிகாரிகள் மீது அல்ல: சீமானை எச்சரித்த காயத்ரி ரகுராம்
அரசு மீது தான் கோபம் இருக்கனும்.. காவல்துறை அதிகாரிகள் மீது அல்ல: சீமானை எச்சரித்த காயத்ரி ரகுராம்
காவல்துறை அதிகாரிகளை சீமான் தரக்குறைவாக பேசிய நிலையில், அவர்களுக்கு மரியாதை கொடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.
நடைபெற்றது. தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்மந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
இந்நிலையில், இவரின் பேச்சுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் கண்டனம் தெரிவித்து தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சீமானின் பேச்சுக்கு அதிமுக பிரமுகரான காயத்ரி ரகுராம் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அரசியல் தலைவர்கள் பொது இடங்களில் காவல்துறை அதிகாரிகளை தவறாக பேசக்கூடாது. அதனால்தான் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
சமீப காலங்களில் கொடூரமான கொலைகள் போன்ற சில ஆபத்தான சூழ்நிலைகளை காவல்துறை அதிகாரிகள் கையாளுவதை ஏற்கனவே நாம் பார்த்து வருகிறோம். பொது மக்கள் மற்றும் அரசியலமைப்பு நலன்களுக்காக நாம் அவர்களை மதிக்க வேண்டும்.
அவர்கள் தங்கள் வேலையில் அவர்கள் நல்லது அல்லது கெட்டது செய்தாலும் சரி, கோபம் தற்போதைய ஆளும் அரசாங்கத்தின் மீது இருக்க வேண்டும், காவல்துறை அதிகாரிகள் மீது அல்ல.
தற்போதைய மாநில அரசால் தான் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. அவர்கள் கடுமையாகப் படித்து, பல போட்டிகளிலும் இந்த நிலையை அடைய கடுமையாக உழைத்திருக்கிறார்கள்.
அதிகாரம் மற்றும் பிற சலுகைகளை அனுபவிப்பதற்காக அவர்கள் தேசத்திற்கான தங்கள் சேவையை ஆடு போல பாதி வழியில் விட்டுவிடவில்லை. போலீஸ் அதிகாரிகளுக்கு மரியாதையை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.