இந்தியா

இந்திய கேரளாவில் பயங்கரம் : மண்ணுக்குள் புதையுண்ட 123 பேர்

Published

on

இந்திய கேரளாவில் பயங்கரம் : மண்ணுக்குள் புதையுண்ட 123 பேர்

இந்தியாவின் (India) கேரளா மாநிலம் வயநாடு அருகே சூரல்மலைப் பகுதியில் நேற்று அதிகாலை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகள் காரணமாக இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123ஆக உயர்ந்துள்ளது.

நிலச்சரிவில் சிக்கிய 150க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம் சுமார் 70 பேரை இன்னும் காணவில்லை என்று அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

கேரளாவின் வயநாடு பகுதியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் காரணமாக அந்தப்பகுதியில் வெள்ளப்பெருக்;கு ஏற்பட்டுள்ளது.

வயநாடு சூரல்மலை பகுதியில் இடைவிடாது கொட்டிய கனமழையால் நேற்று அதிகாலை காலை முதலே லேசான நிலச்சரிவுகள் சில இடங்களில் ஏற்பட்டன.

முன்னதாக அதிகாலை 2 மணியளவில் சூரல்மலை பகுதியில் முதலில் பயங்கரமான நிலச்சரிவு ஏற்பட்டது.

இதனையடுத்து அதிகாலை 4.30 மணிக்கு இரண்டாவதாக மற்றொரு பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவுகளால் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கர பாதிப்பு ஏற்பட்டது.

அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.

இதேவேளை வயநாடு சூரல்மலை நிலச்சரிவில் 500 வீடுகள் சிக்கி இருக்கின்றன. இதனையடுத்து இந்த வீடுகளில் சிக்கிய 1000 பேரை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Exit mobile version