இந்தியா

வரதட்சணை வேண்டாம்.. ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

Published

on

வரதட்சணை வேண்டாம்.. ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் போதும்! மாப்பிள்ளை சொல்லும் வியப்பான காரணம்

மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் எனவும், தேங்காயும் ஒரு ரூபாயும் போதும் என கேட்டிருப்பது ஆச்சரியமடைய வைத்துள்ளது.

பல இடங்களில் நாம் வரதட்சணை கொடுமையை நாம் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் குறிப்பாக கேரள மாநிலத்தில் வரதட்சணை பற்றிய செய்திகள் அதிகம் வலம் வருகின்றது. ஆனால், இங்கு ஒரு மணமகன் ஒருவர் தனக்கு வரதட்சணை வேண்டாம் என்று மணமகள் வீட்டாரிடம் கூறியுள்ளார்.

இந்திய மாநிலமான ராஜஸ்தான், சிகார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜெய் நாராயண் ஜாகர். இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அனிதா வர்மாவுக்கும் திருமணம் நடைபெற்றது.

அப்போது, மணமகளின் வீட்டாரிடம் இருந்து ஒரு தேங்காயும் ஒரு ரூபாயும் மட்டும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. இதனை பார்த்த பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இதில் மணமகன் ஜாகர் பொதுப் பணித் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றி வருகிறார். அதேபோல மணமகளும் முதுகலை பட்டதாரி ஆவார். அவரும் அரசு பணிக்கு படித்து வருகிறார்.

இதுகுறித்து மணமகன் பேசுகையில், “முதுகலை வரை மனைவியை அவருடைய பெற்றோர் படிக்க வைத்ததே வரதட்சிணை போன்றது தான். இந்த முடிவை நான் தான் எடுத்தேன். அதற்கு எனது பெற்றோரும் சம்மதித்தனர்.

எனது மனைவிக்கு அரசு வேலை கிடைத்தால் அவரை முதுகலை படிக்க வைத்த காரணத்திற்காக ஓராண்டு சம்பளத்தை அவரது பெற்றோருக்கு கொடுக்க சொல்லியுள்ளேன்” என்றார்.

Exit mobile version