இந்தியா

விண்வெளியில் இருந்து ராமர் பாலம்.., செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

Published

on

விண்வெளியில் இருந்து ராமர் பாலம்.., செயற்கைக்கோள் புகைப்படத்தை வெளியிட்ட ஐரோப்பிய விண்வெளி மையம்

ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் (European Space Agency) வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையே உள்ள ராமர் பாலத்தின் செயற்கைக்கோள் புகைப்படத்தை ஐரோப்பிய விண்வெளி மையம் (European Space Agency) வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், Copernicus Sentinel-2 satellite என்ற செயற்கைக்கோள் வழியாக எடுக்கப்பட்ட ராமர் பாலம் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.

அதில், ராமர் பாலம் அல்லது ராமர் சேது என்று அழைக்கப்படும் ஆதாமின் பாலம், இந்தியாவின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள ராமேஸ்வரம் தீவுக்கும் இலங்கையின் மன்னார் தீவுக்கும் இடையே 48 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த பாலமானது வங்காள விரிகுடாவின் வடக்கே உள்ள நுழைவாயிலான பாக் ஜலசந்தியிலிருந்து தெற்கே இந்தியப் பெருங்கடலின் நுழைவாயிலான மன்னார் வளைகுடாவை பிரிக்கிறது.

ஒரு காலத்தில் இந்தியாவையும் இலங்கையையும் இணைத்த நிலத்தின் எச்சங்கள் என்று புவியியல் சான்றுகள் தெரிவிக்கின்றன.

சுமார் 130 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட மன்னார் தீவு, ரயில் மற்றும் சாலைப் பாலம் மூலம் இலங்கையின் நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

அதன் எதிர் பக்கத்தில், ராமேஸ்வரம் தீவு, இந்திய நிலப்பரப்பில் 2-கிமீ நீளமுள்ள பாம்பன் பாலத்தின் மூலம் இணைக்கப்படுகிறது.

இங்குள்ள கடல் பகுதி கடல்வாழ் உயிரின தேசிய பூங்காவாக அங்கிகரிக்கப்பட்டது. இந்த கடல் 1 முதல் 10 மீ. ஆழம் மட்டுமே கொண்டது” என்று தனது இணையதள பக்கத்தில் ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Exit mobile version