இந்தியா

முகேஷ் அம்பானி Deepfake காணொளி., லட்சங்களில் பணத்தை இழந்த வைத்தியர்

Published

on

முகேஷ் அம்பானி Deepfake காணொளி., லட்சங்களில் பணத்தை இழந்த வைத்தியர்

பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் Deepfake காணொளியால் மும்பை வைத்தியர் ஒருவர் மோசமாக ஏமாற்றப்பட்டார்.

டீப்ஃபேக் வீடியோ (Deepfake video) விவகாரம் நாடு முழுவதும் பல பிரச்சனைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்த போலி வீடியோக்களால் ஏற்கனவே பல சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சிலர் சினிமா பிரபலங்களின் போலி வீடியோக்களை உருவாக்கி வைரலாக்கி வருவது தெரிந்ததே.

ஆனால், சைபர் கிரைமினல்கள் இதைப் பயன்படுத்தி புதிய வகையான மோசடிகளை செய்து வருகின்றனர்.

பிரபலங்களின் பெயர்களுடன் Deepfake video-க்களை உருவாக்கி லட்சக்கணக்கான ரூபாய் கொள்ளையடிக்கப்படுகிறது. இதுபோன்ற பல மோசடிகள் நாட்டில் ஏற்கனவே வெளிச்சத்துக்கு வந்துள்ளன.

சைபர் திருடர்களின் வலையில் சிக்கி, சில ஊழியர்கள், உயர் அதிகாரிகள், சினிமா நட்சத்திரங்கள் மற்றும் சாமானியர்கள் கூட ஏமாற்றப்பட்டு பெரும் தொகையை இழந்துள்ளனர்.

சமீபத்தில், பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் Deepfake video-வைப் பார்த்து ஏமார்நது, மும்பை வைத்தியர் ஒருவர் தனது பணத்தை இழந்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் அந்தேரியைச் சேர்ந்த 54 வயது ஆயுர்வேத வைத்தியர் கே.எச்.பாட்டீல் Instagram கணக்கு மூலம் நடந்த பங்கு வர்த்தக மோசடியில் சிக்கினார்.

அந்த Reels-களில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் Deepfake video காணப்பட்டது. அந்தக் காணொளியில், அம்பானி ‘ராஜீவ் சர்மா டிரேட் குரூப்’ நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதைப் போல் தொகுக்கப்பட்டுள்ளது.

இதை வைத்து பாட்டீல் உடனடியாக Google-ல் அந்த நிறுவனத்தை தேடியபோது, அந்நிறுவத்திற்கு மும்பை மற்றும் லண்டனில் அலுவலகங்கள் இருப்பதாக காண்பித்துள்ளது.

இதை நம்பிய அவர் ஒரே நேரத்தில் 7 லட்சம் ரூபாயை பல்வேறு வங்கி கணக்குகளுக்கு அனுப்பினார்.

வர்த்தக இணையதளமும் ரூ.30 லட்சம் லாபம் காட்டியது. மகிழ்ச்சியடைந்த பாட்டீல் பணத்தை எடுக்க பலமுறை முயற்சித்தும் தோல்வியடைந்தார்.

பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாட்டீல், காவல்துறையை அணுகினார். மும்பை பொலிஸார் வழக்குப் பதிவு செய்து, வங்கிகளின் சட்ட விரோத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்குமாறு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version